கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (திருவதி காணி 58 results found)

அதிர் காணி

: (கிராம நிலங்களில்) காணியாட்சி உரிமை

அபிஷேகக்காணி

: அபிஷேகக் காணிக்கை பார்க்க

அபிஷேகக் காணிக்கை

: மகுடாபிஷேகம் ஆனதும் அரசனை நேரில் கண்டு விசுவாசத்தைத் தெரிவித்துச் செலுத்தும் காணிக்கை

அமரமாகாணி

: அ மாநாயக்கனுக்கு அளிக்கப்பெற்ற நிலப் பகுதி

அர்ச்சனாவிபவகாணி

: கோயிற் பூசகர்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்

ஆட்டைக் காணிக்கை

: வருஷந்தோறும் செலுத்த வேண்டிய காணிக்கை; ஆட்டைச் சம்மாதம் என்பதும் இதுவே போலும்

இரத்தக் காணிக்கை

: போரில் வீழ்ந்த வீரருடைய வழியினர்க்கு அளித்த மானியம்

இராசகரகாணிக்கை

: அரண்மனைக்கு அந்த அந்தக் காலங்களில் செலுத்தவேண்டிய காணிக்கைப் பொருள்

உவச்சக்காணி

: கோயிலில் (மத்தளம்) கொட்டும் ஊழியத்துக்கு விடப்படும் மானியம்

உழவு காணி

: நிலத்தை உழுது பயிரிடுதல்

உழவுகாணியாட்சி

: நிலத்தை உழுது பயிர் செய்யும் உரிமை

கங்காணி

: கண்காணி பார்க்க

கண்காணி

: மேற்பார்வை; மேல் விசாரணை செய்வோன்; மேற்பார்வை செய்வதற்காக இறுக்கும் வரி

கண்காணிக் கணக்கர் முதல்

: கண் காணிப்போர் செலவுக்காக இடும் முதல்

கண்காணி நாயகம்

: மேற்பார்வை யிடுவோர் தலைமை உத்தியோகம்

கண்காணிமாசெல்லு

: மேற்பார்வையிடுவோருக்கு நெல்லாக இறுப்பது

கணக்கக்காணி

: கிராமக் கணக்கர்களுக்கு விடும் மானிய நிலம்

காணி

: பரம்பரை உரிமை; அநுபவிக்கும் உரிமை; காணியாட்சி பார்க்க

காணி

: ஒரு நிறை

காணிக்கடன்

: நிலவரி; காணிக்கூலி என்பதும் இதுவே போலும்

காணிக்கை

: அரசனுக்கும் சில அதிகாரிகளுக்கும் செலுத்தவேண்டிய கையுறை

காணிப்பற்று

: ஒருவருக்கு உரிமை உள்ள கிராமம் அல்லது நிலம்

காணிப்பிடிபாடு

: நிலச்சாகுபடிக்கான உரிமைப் பத்திரம்

காணிமாறுதல்

: உரிடைய நிலத்தை இழத்தல்

காணியாண்மை

: பரம்பரையாக அநுபவிக்கும் உரிமை

காணியாட்சி

: பரம்பரையாக அநுபவிக்கும் உரிமை

காணிவிலை

: உரிமையை விற்றுக் கொடுத்தல்

காணிவெட்டி

: முன்னாளில் வழங்கி வந்த வரிவகைகளுள் ஒன்று; வெட்டி என்பதன் ஒரு பிரிவு போலும்; விளை நிலங்களிலே குழி வெட்டுவது போன்றதாக இருக்கலாம்

கார்த்திகைக்காணிக்கை

: கார்த்திகையில் அறுவடைக் காலத்தில் அளிப்பது; ஆடிப்பச்சை பார்க்க

சக்கரகாணிக்கை

: குயவர் இறுக்கும் வரி; திரிகை ஆயம் எனவும் பெறும்

சாக்கைக்காணி

: கோயிலில் பூசையின்போது கூத்து நடத்தும் சாக்கையருக்கு அளித்த மானியம்; நிருத்தியபோகம் எனவும் படும்

சீகாரியக் கண்காணி

: கோயில் நிர்வாகத்தை மேற்பார்ப்போர்

சீதனக்காணி

: சீதனமாகப்பெற்ற நிலம்

தச்சாசாரியக்காணி

: கோயிலில் தச்சாசாரியர் கவனிக்கவேண்டிய வேலைகளுக்கான உரிமை; அதற்கான மானியம்

தரிசன காணிக்கை

: பெரியோரைக் காண்கையில் அளிக்கும் காணிக்கை

திருநாமக்காணி

: சிவன் கோயிலுக்கான தேவஸ்தான நிலம்; கோயிலின் பெயரில் உள்ள நிலம்

திருநாமத்துக்காணி

: சிவன் கோயிலுக்கான தேவஸ்தான நிலம்; கோயிலின் பெயரில் உள்ள நிலம்

தோரணகாணிக்கை

: வீதிகளில் தோரணமிட்டு அலங்கரிப்பதற்கான செலவு

நட்டவக்காணி

: நட்டுவக்காணி பார்க்க

நட்டுவக்காணி

: கோயிலில் நட்டுவம் பார்ப்போருக்கு அளிக்கப் பெற்ற இறையிலி நிலம்

நாட்டுக் காணிக்கை

: நாடு என்னும் சபையாருக்குச் செலுத்த வேண்டிய காணிக்கை; அந்தச் சபையார் அரசாங்கத்தாருக்குச் செலுத்தும் காணிக்கையும் ஆகும்

பட்டயகாணிக்கை

: தாமிர சாசனம் பெறுவதற்கு இறுக்கும் காணிக்கை

பண்டாரக் கண்காணி

: கஜானா அதிகாரி; பொக்கிஷத்து அதிகாரி

பண்டாரக் கண்காணி

: கஜானா அதிகாரி; பொக்கிஷத்து அதிகாரி

பழமுதல் கண்காணி

: கோயில் மேற்பார்வையாளன்

பாதவக்காணி

: கோயில் வேலைக்காரர்களுக்கு உரிய படித்தர நிலம்

பிரசண்ட காணிக்கை

: (பிரசண்டம்-கடுமையான, பயங்கரமான) படைப் பணம் என்பதனுடன் சேர்ந்து காணப்படுகிறது; படை வரியில் ஒரு வகை

புரோகிதக்காணியாட்சி

: புரோகிதராக இருக்கும் பரம்பரை உரிமை

மாடுகாணிக்கை

: ஊருக்கு விஜயம் செய்யும் அதிகாரிகள் முதலானோர் உபயோகத்துக்கு மாடு அளிக்கும் கடமை

ரத்தக்காணிக்கை

: இரத்தக்காணிக்கை பார்க்க

ராசகுலம் காணிப்பற்று

: ராஜகுடும்பத்தைச் சேர்ந்தோர் அனுபோகத் தில் உள்ள நிலம் அல்லது கிராமம் (தேவதானம், பிரமதேயம், பள்ளிச்சந்தம் ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படுவது)

வக்காணிக்கு மண்டபம்

: சாஸ்திரம் புராணம் முதலியவை விரித்து உரைக்கப்படும் மண்டபம்

வக்காணித்தல்

: சாஸ்திரம், புராணம் முதலியவற்றை விரித்து உரைத்தல்

வருஷகாணிக்கை

: ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய காணிக்கை

வாசல் காணிக்கை

: அரண்மனைக்குச் செலுத்தும் காணிக்கை; வாசல் என்னும் உத்தியோகஸ்தனுக்குச் செலுத்துவதும் ஆகும்

வீணைக்காணி

: கோயிலில் பூசைவேளையில் வீணை வாசிக்கும் உளிமை; அதற்கான மானியம்

ஜன்மக்காணி

: பிறப்புரிமை; ஜன்மபூமி பார்க்க

ஸ்ரீகாரியக் கண்காணி

: சீகாரியக் கண்காணி பார்க்க
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (திருவதி காணி 38 results found)

அதிர்காணி

:
 • கிராம ஆட்சியில் முறையாகப் பெற்ற காணி ஆட்சி உரிமை.

உழவுகாணியாட்சி

:
 • நிலத்தை உழுது பயிர் செய்யும் உரிமை

ஏறும்புகாணித் திருக் குத்துவிளக்கு

:
 • பீடத்திலிருந்து எழுந்துள்ள உலோகக் கம்பியில் மாட்டப்பெறும் நெய்யகலை வேண்டிய உயர அளவில் நிறுத்தி வைப்பதற்கமைந்ததாக, கம்பியில் உள்ள துளையில் புகு ஆணியிட்டு நிறுத்தி எரியவைக்கும் குத்துவிளக்கு. (புகு ஆணி - புகாணி)

 • திருநந்தா விளக்கு எரிய நான் இட்ட ஏறும் புகாணித் திருநந்தாவிளக்கு ஒன்று

 • தெ. கல். தொ. 4. கல். 860

ஒத்துவக்காணிவிருத்தி

:
 • சாமவேத இசைப்பாடலுக்குரிய சுலோகங்களை ஆசாரியன் முதலில் பாட, அதே சுலோகத்தை மற்றொருவர் தொடர்த்து பாடும் முறைமையாகிய வேத விருத்திக்கு அளிக்கப்பெறும் இறையிலி நிலம்.

 • முருகமோடன் எடுத்த மண்டபத்துள் ஒத்துவக்காணி விருத்தியும் பாரதப்புரமும்

 • தெ. கல். தொ. 5. கல். 223

 • ஓத்துவக்காணி விருத்தி என்றிருத்தல் வேண்டும். ஓத்து - வேதம். வக்காணித்தல் - பொருள் வழுவாது ஓதுதல். விருத்தி - அவர் பெறும் நிலம்.

ஓடக்காணி

:
 • ஏரி, பெருங்குளம் ஆகியவற்றைக் குறுக்கே கடக்க அமைக்கப்பெறும் ஓடம் என்னும் மிதவையைச் செலுத்து பவன், கண்காணிப்பவன், பழுது ஏற்படும் போது கண்டு செப்பஞ் செய்யும் தச்சன், கருமான், மரமிடும் வளையர் ஆகியோருக்குரிய - காணியாட்சியாக ஊர்ச் சபையாரால் அளிக்கப்படும் நிலம்.

 • தெ. கல். தொ. 8. கல். 652

கண்காணி

:
 • பயிர் வகைகளை மேற்பார்வை செய்வோன். இச் செயல் பாடிகாவலுள் அடங்கும். இதற்கு அரசு பெறும் ஆய வரியும் இப்பெயர் பெறும். இவ்வரி நெல்லாகப் பெறப்படும்.

 • வெண்குன்றக்கோட்டத்து வாதவூர் நாட்டு - சிறுபாடிகாவல், கண் காணி, அரிமுக்கை உள்ளிட்ட நெல்லாயமும்

 • தெ. கல். தொ. 7. கல். 98

கண்காணி நாயகம்

:
 • கிராம அல்லது ஊர் நிர்வாகங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன்.

கணக்கக்காணி

:
 • கிராமக்கணக்கர்களுக்குக் கிராமப் பொது நிலத்தில் சபையாரால் விடப்படும் சர்வ மானிய நிலம்.

காணி

:
 • வாரிசு உரிமை நிலம். கோயில்களிலும் அற நிலையங்களிலும் பணி செய்வார்க்கு அரசோ கிராமசபையோ நிலை யாக வழிவழித்தொடர்ந்து ஊழியம் செய்து பரம்பரை உரிமை யாக அனுபவிக்கக் கொடுக்கும் நிலம். இதனைக் காணியாட்சி என்றும் கூறப்பெறும். விருத்தி, காணி, போகம், முதலியன ஒரு பொருளாம்.

 • இந்நாயனார்க்கு வில்லவராயர் செய்வித்த உலகமுண்டான் திருநந்தவனஞ் செய்யும் பேர்க்கு இவர் காணியாக கொண்டு விட் - நிலம்.

 • தெ. கல். தொ. 17. கல். 170

காணி ஆட்சிப்பேறு

:
 • நிலவுரிமையாளர், தன்னுரிமைக் குரிய தாகச் செலுத்தும் வரி.

காணிக்கடன்

:
 • காணியாட்சி பெற்ற நிலங்களுக்குரிய நிலவரி. நிலத்தின் தரம் விளைவு ஆகியவற்றிற்கேற்ப அரசுவிதிக்கும் வரி. இவ்வரி நெல்லாகவும் காசாகவும் அமையும். நிலவுரிமையாளர் அரசுக்குச் செலுத்தும் வரி.

 • இறைகட்டின நிலத்தால், காணிக்கடன் - அளக்கக் சடவ நெல்லும் இடக்கடவ பொன்னும் காசும

 • தெ. கல். தொ. II. கல். 5

காணிக்கை

:
 • அரசனுக்கும் உயர் அதிகாரிகட்கும் மக்கள் செலுத்தும் கையுறை. விருப்பவரி.

காணிக்காரளவு

:
 • இஃது அரசியலார் மேற்பார்வையில் ஆளிட்டுச் செய்யும் அலுவல்களில் ஒன்றாகும். இவ்வதிகாரிகள் கோயில் களுக்குரிய நில வருவாய்களை ஆங்காங்கே அறுவடைக் காலங் களில் முறைப்படிப் பெற்று, ஒன்றாகச் சேர்த்து, தலைமைப் பண்டாரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து கணக்கில் பதிவிடுவார்கள். எனவே, அவர்கள் பெற்ற பதவியும் காரளவு என்று பெயர் பெற்றது. இவர்கட்குரியதாகக் காணி உண்டு. இக்காலத்தில் இச்செயலார் பெரும் பண்ணையாளர்களிடம் கார்வாரி என்னும் பெயருடன் பணி புரிகின்றனர்.

 • உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரமுடையார் கோயிலில் காரளக்கும் ராஜராஜப் பலலவராயனுக்கு தன் பாட்டன் நிலையாய் வருகிற காணிக்காரளவுக்கு காணியாகக் குடுத்தோம் காணிக்காரளவு மாடம் உள்ளிது ஒடுக்கி வருகிற பரிசு

 • மாடம் - நெற்களஞ்சியம்

 • தெ. கல். தொ. 2 : 3. கல். 68

காணி கொண்டாரும் அடை கொண்டாரும்

:
 • நிலத்தைப் பரம்பரையாக உரிமையுடன் அனுபவிக்கும் உரிமையாளரும் பயி ரிடும் பகுதி உரிமை கொண்டாரும். (உரிமையாளர் - குத்தகையாளர். பகுதி உரிமை - உள்குத்தகை.)

 • இக்கோயில் காணி கொண்டாரும் அடை கொண்டாரும் இக் கோயில் திறத்து முறை செய்தாரே இவ்விளக்கு எரிக்கக் கடவோ மானோம்

 • முதற்குலோத்துங்கன், கி. பி. 1105

 • தெ. கல். தொ. 5. கல். 1001

காணிமாடு

:
 • குத்தகைக் காணியைப் போன்று இடையர் உரிமையுடன் பெற்றுள்ள பயன் தரும் மாடு. தானிய விளைவினால் பயன் தரும் நிலங்களைக் காணியாட்சியகப் பெறுதலைப் போன்று, பால்வளம் தருதல் மாடெனும் செல்வத்தாலாதனான். மாடு காணி மாடென்று கருத்துடன் கூறப்பட்டுள்ளது. காணி யாட்சி போன்ற உரிமையுடன் இடையர் பெறும் மாடு.

 • மலையம்பாக்கத்து மன்றாடி பெருமாள் கேன் சோக் கோனேன். இவ்வெருகை பத்துக் காணிமாடாகக் கைக் கொண்டு அருமொழி தேவன் உழக்கால்

 • தெ. கல். தொ. 7. கல். 539

காணியாறின நிலம்

:
 • குறிப்பிட்ட பொதுக் காரியங்கட்காக உர்ச்சபையார் அளிக்கும் இறையிலியாகும். காணியாட்சி நிலத் தினை, அப்பணி செவ்வனே நிகழாத குற்றத்தால், காணியாட்சி உரிமையினை மாற்றி மற்றொரு பணியாளனுக்கு உரிமை செய் யும் நிலம்.

 • இந்நாட்டு குலோத்துங்க சோழன் கருப்பூரில் துரோகஞ் செய் நாரை காணி மாறின நிலமும்

 • தெ. கல். தொ. 5. கல். 708

காணியாட்சி

:
 • நில அனுபோக பரம்பரை உரிமை.

காணி வெட்டி

:
 • திலங்களின் எல்லைகளைக் கோலும் ஆள்வர், அண்டை வெட்டிக்காட்டும் ஆள்வரி.

கார்த்திகை காணிக்கை

:
 • இகனைக் கார்த்திசைக் காசு என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கார்த்திகை நாளின் சிறப் பிற்காக மக்களிடம் பெறும் மகமையாகும். இதனை ஊர்ச்சபை யாருள் ஒரு குழுவினர் வசூல் செய்து திங்கள்தோறும் ஊரிலுள்ள கோயிலில் கார்த்திகை விண்மீன் கூடிய நாளில் திங்கட் சிறப்பு விழா நிகழ்த்துவர். இன்றும் சில கிராமங்களில் இச் சிறப்பு வழக்கிலுள்ளது.

 • தெ. கல். தொ. VII. கல். 57

காவிதிக்காணி

:
 • காவிதிப்பட்டம் பெற்றாருக்கு அரசோ, ஊர்ச்சபையினரோ அளிக்கும் இறையிலி நிலம்.

 • இவ்வூர் மத்யஸ்தன் தம்பிமார் - காவிதிக்காணி

 • தெ. கல். தொ. XIX. கல். 63

கூத்தக்காணி

:
 • கோயில் திருவிழா நாளில் கூத்தாடும் குழுவினர்க்கு அளிக்கப்பெறும் இறையிலி நிலம், திருநாளுக்குக் கூத்தாடுகைக்குக் காணியாக நிலம்

 • புதுக்கல் - 139

கோயில் கணக்குக்காணி

:
 • கோயிலுக்குரிய நிவந்தங்களாகிய திலபுலன் வருவாய்களையும், நாள் வழிபாட்டுச் செலவினங்களை யும், பிற சிறப்பு வருவாய்களையும் திருநாள் போன்ற சிறப்புச் செலவினங்களையும், அணிகலன்கள், உடைமைகள் ஆகியவற்றை யும் முறையாக கணக்கிலிட்டுக் கணக்கெழுதி வரும் கோயில் கணக்கனுக்குரிய உரிமை இறையிலி நிலம்.

 • திருவூறலுடையார் கோயில் கணக்கு காணி உடைய பெருந் தூறுடையான்

 • தெ. கல். தொ. 5. கல். 1380

ஸ்ரீகார்யக் கண்காணி

:
 • நாட்டிலுள்ள திருக்கோயில்களின் காரியங்களைச் செய்து வரும் அதிகாரிகளையும் அவர்களது கணக்கினையும் அரசின் ஆணையின்படி தணிக்கை செய்யும் மேலதிகாரி.

ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம்

:
 • கோயிற் காரியங்களை ஒழுங் காக நடத்துவிக்கும் அதிகாரி ஸ்ரீகார்யம்; ஸ்ரீகார்யம் தவறாமல் நிகழ்வதை ஆராய்பவன் ஸ்ரீகார்யக் கண்காணி; இவர்கள் இருவர் செயலும் குறையின்றி முறையாக நிகழ ஆராய்ந்து தணிக்கை செய்யும் சலைமை அதிகாரி நாயகம். எனவே கோயிற் காரியங்களின் நிர்வாகத் தலைமைத்துறை அதிகாரி ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம் என்று பெயர் பெற்றார்.
  முதல் இராசராசன் காலத்தில், தஞ்சைப்பெரிய கோயிலுக்கு இருந்த ஸ்ரீகார்யக்கண்காணி நாயகம்.

 • பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர் கூற்றத்துப் பாளூர்ப்பாளூர் கிழவன் அரவணையான் மாலரி கேசவன், என்பவனாவன்

 • தெ. கல். தொ. 2 : 2. கல். 36

தச்சக்காணி

:
 • தச்சர்கட்குரிய காணியாட்சி நிலம்.

 • இவ்வூர்த்தச்சக்காணி செம்பாதியுடைய தச்சன் வடுகனாதன் திருவாய்க் குலமான் தொண்டைனாட்டாசாரியநேன்

 • தெ. கல். தொ. 3 : 1. கல். 35

திருநாமத்துக்காணி

:
 • கோயிலுக்குரிய சிவபெருமானின் பெயரால் அளிக்கப் பெறும் இறையிலி நிலம்.

 • நஞ்சை புஞ்சை திருவாநிலை மஹாதேவர்கு வேண்டும் நிருந்த களுக்குத் திருநாமத்துக் காணியாக

 • தெ. கல். தொ. 3 : 1. கல். 21

திருப்பதியக்காணி

:
 • சிவன் கோயில்களில் திருப்பதிகமெனும் தேவாரப் பாடல்களை நாளும் பாடுதற்கு நியமிக்கப் பெற்றவர் பெறுதற்குரியதாக விடப்பட்ட இறையிலி நிலம்.

 • இக்கோயில் திருப்பதியக்காணி இவந் கைக்கொண்டு இவன் இட்டாரே திருப்பதியம பாடவும்

 • தெ. கல். தொ. 17. கல். 453

தோரணகாணிக்கை

:
 • வீதிகளில் தோரணமிட்டு அலங்கரிப்பதற்கு, ஊர்ச்சபையார் பெறும் சிறுவரி.

நட்டவக்காணி

:
 • நாட்டியம் பயிற்றுவிக்கும் நட்டுவனார்க்கு அரசு அளிக்கும் இறையிலி நிலம் நட்டவக்காணி என்பதாகும். திருக்கோயில்களில் நாட்டியம் நிகழ்த்துவிக்கும் ஆசிரியனுக்குரிய காணியாட்சியும் இப்பெயர் பெறும்.

 • ஸ்ரீபராந்தக தேவீஸ்வரத்து நட்டவக் காணியுடைய நித்த விடங்கன்

 • தெ. கல். தொ. 5. கல். 579

நாடுகண்காணி நாயகம்

:
 • சோழராட்சியில். அரசு அமைத்த நாட்டு அதிகாரிகளின் செயல்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன். இவ்வதிகாரி எவ்விடத்தும், யாரிடமும், எக் கணக்கினையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி பெற்றவன்.

 • இந்நாடு உள்ளிட்ட நாடுகள் கண்காணி நாயகம் செய்கின்ற வைப்பூர் உடையான்

 • முதல் இராசராசன்

 • தெ. கல். தொ. 18. கல். 328

 • திருக்கோவலூர் திருவீரட்டானமுடைய மஹாதேவர் ஸ்ரீ பண்டாரம், இன்னாடு கண் காணி நாயகஞ் செய்யும் இளமங்கல முடையான நிச்சல் ஸ்ரீயாரூர் இத்சேவர் ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீபண்டாரப் பொத்தகப்படி நிலைவுருக் கண்டு.

 • முதல் இராசேந்திரன், கி. பி. 1018

 • தெ. கல். தொ. 7. கல். 891

 • சேநாபதி முடிகொண்ட சோ விழுப்பரையர்க்காக நாடு கண்காணி நாயகஞ் செய்கின்ற கந்சி சீ காருடையான்

 • (புதுக். கல். 90)

பழநடைக்காணி

:
 • பழைய முறைமைப்படி தொடர்ந்து அமைந்த செலவினங்களுக்குரிய வருவாயாக அமைந்த இறையிலி நிலம்.

 • இவ்வூர்க்கு ஊர்க்கணக்க காணி உடையவனும் ஆசுவிகளும் பண்டொடு பழநடை காணியுடையவனே செய்யக்கடவதாகவும்

 • தெ. கல். தொ. 7. கல். 430

மாகாணி

:
 • பொன்எடையிடும் அளவையுள் ஒரு பகுதி. இதுமாவும் காணியும் எடை கொண்ட கணக்காகும். 1/10 மஞ்சாடி - 1 மா. 1/40 மஞ்சாடி - 1 காணி. என்ற அளவில் முதல் இராசராசன் காலத்தில் கொள்ளப். பட்டுள்ளது.

 • ஸ்ரீவாஹுவளையும் - நிறைமுக்கழஞ்சே இரண்டு மஞ்சாடியும் முக்காணியும்

 • தெ. கல். தொ. 2 : 1. கல். 7

வாசல் காணிக்கை

:
 • அரண்மனைக்கு மக்கள் செலுத்தும் காணிக்கைப்பணம். இதனை வசூலிப்பவன், வாசல்காரியம் என்பவனாவன். இவனுக்குரிய காணிக்கைப் ணம், வாசல் விநி யோகம் என்று கூறப்பெறும்

ஸ்ரீவைஷ்ணவக் கண்காணி

:
 • திருமால் கோயிலில் வைணவ ஆகம விதிப்படி வழிபாடுகள் நிகழ கண்காணிக்கும் அதிகாரி. இவர் ஸ்ரீகார்யத்தின் மேற்பார்வையாளராகவும் இருப்பர்.

 • எம்பெருமான் கோயிலில் ஸ்ரீகார்யஞ் செய்கின்ற இராயூர் அருளாள பட்டனும், இக்கோயிலில் ஸ்ரீவைஷ்ணவக் கண்காணி செய்கின்ற வண்டுவராபதி பட்டனும்.

 • தெ. கல். தொ. 3 : 1. கல். 38

அகாரணக்கண்காணி

:
 • ஊர்ச்சபையின் செயல்கள், கோயில்களின் செயல்கள் ஆகியவற்றை விரும்பியபொழுது ஆய்வு செய்யும் அதிகாரி.

 • அகாரணக் கண் காணி தற்புருஷ தேவர்

 • தெ. கல். தொ. 17. கல். 576

கங்காணி (கண்காணி)

:
 • மேற்பார்வையாளன்.

காமக் காணி

:
 • விருப்பத்திற்குரியதாக அளிக்கப்பட்ட நிலம்.

தட்டாரப்பணி செய்காணி

:
 • திருக்கோயில்களில் திருமேனிகட்கு அணிவிக்கும் திருவாபரணங்களைச் செய்யும் பணியாள ராகிய தட்டார்கட்கு அளிக்கப்பெறும் இறையிலி நிலம்.

 • தெ. கல். தொ. 5. கல். 515

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (திருவதி காணி 233 results found)
Word Book Name TNARCH Data Page

தண்காணி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2339 16

காணிபற்று

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2373 49

மாக்காணி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2373 48

காணியாட்சி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 91

மாகாணிப்பணம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 92

மாகாணிப்பணம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2414 92

காணி

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2416 98

காணிக்கை

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2421 107

காணிக்கை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2106 8

கங்காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2127 33

காணியாளர்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2144 54

காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2156 68

எறும்பக்காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2175 87

திருநாமத்துக்காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2195 108

காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2201 113

கோயிற்காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2230 154

கங்காணி

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2239 161

காணி பிரமாணம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2280 210

கற்பூரங் காணிக்கை

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2287 216

முக்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3131 25

கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3134 30

ஸ்ரீ ருத்திரமாஹேஸ்வர கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3140 42

கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3141 44

காணி போகத்தார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3163 77

முக்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3191 111

உலகாணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3199 120

காணியாளர்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3268 200

கண்காணி செய்வார்

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2926 10

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2926 9

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2929 15

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2932 21

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2932 22

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2933 23

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2933 24

ஸ்ரீசாவேபாரக் கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2934 26

மாஹேயரக் கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2940 38

காணிக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2947 51

ஸ்ரீ$$$ கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2956 64

திருநாமத்துக்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2991 116

மயயேசுர கண்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2991 116

திருநாமத்துக்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3011 142

கறவைக் காணிக்கை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3054 217

கங்காணி

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3109 295

ஸ்ரீ மாஹேஸ்வரக் கண்காணி செய்வார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1060 1

கற்பூரக் காணிக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1061 3

ஸ்ரீ மாஹேஸ்வரக் கண்காணி செய்வார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1061 3

இறையிலி காணிக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 9

குதிரைக் காணிக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 9

கோட்டைக் காணிக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 9

நாட்டுக் காணிக்கை

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1066 9

ஸ்ரீ மாஹேஸ்வரக் கண்காணி செய்வார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1069 13

ஸ்ரீ மாஹேஸ்வரக் கண்காணி செய்வார்

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1117 86

மடக்காணி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1134 121

ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1149 146

ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1150 147

அக்ரசனைக் கண்காணி

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1181 198

உடையார் திருக்கொட்டாறுடையார் திருநாமத்துக்காணி பட்டப்பாழ்‌

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 938 388-2

திருமுற்றத்துக்காணி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1022 471-II,1

திருமுற்றத்துக்காணி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 3 1026 475-I,3

சீமா கேஸ்வரகண்காணி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 615 66-2

இழையான்குடிக் காணி

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 617 68-21,40

சூலவரி காணிக்கை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 629 80-3

திசைக் காணிக்கை

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 629 80-4

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3276 6-22

தச்சவாசாரியக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3296 75-5

காணிக்கை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 80-32

காணிக்கை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 82-51

ஸ்ரீமாஹேஸ்வரக்கண் காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3298 82-1

தச்சவாசாரியக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3299 86-5

ஸ்ரீமாஹேஸ்வரக்கண் காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3299 86-5

ஸ்ரீமாஹேஸ்வரக்கண் காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3301 89-5

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3313 115-10

நாட்டு காணிக்கை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 3313 115-17,16

தட்டாரக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3336 13-8

உவச்சக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3350 38-3

காமக்காணிகோவன்பாலை

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3359 51-17

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3365 64-1

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3365 64-3

சிவநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3368 69-II,1

மாகாணி(நாட்டுப்பிரிவு)

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3383 84-2

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3402 114-2,3

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3413 139-2

கூத்தாட்டுக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3415 144-3,4

ஸ்ரீமாஹேஸ்வரக்கன்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3416 146-2

ஸ்ரீமாஹேஸ்வரக்கன்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3417 150-9

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3424 164-2

மாதிருவதி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3424 163-2

ஸ்ரீமாஹேஸ்வரக்கன்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3429 174-3

சிவநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3432 179-5

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3432 180-11

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3437 192-4,5

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3439 196-3

திருநாமத்துக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3443 206-2

காமக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3444 207-7

காமக்காணி

: பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3467 257-18

காணியாளர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1788 10

கோயிற்‌ காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1788 9

காணிக்கவறு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1790 13

நட்டுவர்க்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1836 73

உவச்சக் காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1845 82

சாமந்தர்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1908 160

செம்பாதி காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1977 236

ஊராண்மைக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1979 240

அஞ்சாதிக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1982 244

ஊராண்மைக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1982 244

கொக்குகாணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1984 247

காணியாளர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1992 258

மாகாணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1998 265

முக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1998 265

முக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2008 278

முக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2017 289

இருமாக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2019 294

திருநாமத்துக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2019 292

அரைக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2021 297

கிளிக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2021 297

நில்முக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2021 297

கருப்படி காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2042 322

காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2042 322

காணியாளர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2078 373

திருநாமத்துக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2079 377

காணியாளர்

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2098 400

குதிரை காணிக்கை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3562 6-5

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2005 3682 220-2

வக்காணிப்பார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3710 20-12

வக்காணிப்பார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3711 22-5

வக்காணிப்பார்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3711 23-9

காணிக்கை

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3721 39-14

சாலைசபைக் கண்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3748 83-6

மாகேஸ்வரக் கண்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3814 196-1

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3825 220-9

மாகேஸ்வரக் கண்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3825 219-3

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 2004 3828 225-3

காணிக்கடன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3841 17-12

நகரக்கணக்கு காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3850 39-6

திருக்காணிஸ்வரமுடைய மகாதேவர்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3858 51-5

வக்காணித்தல்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3928 134-2

குடிநீங்கா காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 4; காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 4 3969 187-2

மாகாணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4166 30

காமையச் சாகாணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 3 4193 73

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3973 2-11

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3974 6-30

ஸ்ரீமாஹேறகண்காணி விளக்கு பிச்சன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 3975 10-5

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4071 109-3

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4074 116-6

விசையகண்டகோபலன் கொண்ட காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4076 120-2

ஸ்ரீமாகேசுவரக் கண்காணி செய்வார்கள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4096 146-2

திருநாமத்துக்காணி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4110 163-21

ஸ்ரீமாகேசுவரக் கண்காணி செய்வார்கள்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4110 162-9

கண்காணி சொக்கநாயன்

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4115 170-3

காணி ஆட்சி

: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 5; கடலூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 5 4115 170-2

திருநாமத்துகாணி

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5780 1-2,4

திருநாமத்துகாணி

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5781 3-8

திருநாமத்துகாணி

: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5877 133-2

காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2547 7

மஞ்சனான காணியான்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2613 75

இச்சக்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2623 87

காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2623 87

காணிக்கை

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2623 87

திருவதிபதி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2634 99

காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2640 107

காணி பேறு

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2650 120

பழங்காணி

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2660 132

கற்றாயன்‌ காணியான வீரசோழ சதுர்வேதிமங்கலம்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5079 5

கற்றாயன்‌ காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5112 43

காணியாளர்கள்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5117 48

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5149 82

ஊராண்மைக்காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5157 93

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5159 95

குற்றக்காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5159 95

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5162 99

பிடாரியார் காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5165 102

காமக்காணி சோமாசி சோமாசி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5213 160

காமக்காணிப் பட்டன்‌ உய்யவந்தான்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5220 169

உவச்சக்காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5224 173

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5232 184

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5233 185

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5234 187

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5236 190

திருநாமத்துக்காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5236 190

காணிக்கை

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5240 195

காமக்காணி சேந்தன்‌

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5242 198

திருமுற்றங்காணி

: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 5270 228

திருவதி காணி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 311 4-24

உதையன் காணி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 321 13-2

முப்பது வட்டத் துக்காணியுடைய சிவப்பிராமணர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 333 25-16

காமக்காணித்தாயன் சந்திர சேகரன்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 334 26-6

காமக்காணித்தாயன் சன்திரசேகரன்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 345 37-3

காமக்காணி கோயில் சிங்கம்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 346 38-9

வைத்யக் காணி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 347 39-30

முப்பது வட்டத் துக்காணியுடைய சிவப்பிராமணர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 364 56-2

முப்பது வட்டத் துக்காணியுடைய சிவப்பிராமணர்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 371 63-5

காணியான நாள்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 377 69-I,18

இலச்சனைக் கண்காணி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 419 111-14

கொழுக்து காணிக்கை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 421 113-12

நாட்டுக் காணிக்கை

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 421 113-11

அகாரணக் கங்காணி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 467 159-8

கொடுமலூர்க்கிழவன் காணிநாகன்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 474 166-8

மாஹேஸ்வரக் கண்காணி சான தேவன்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 479 171-1

சனனாதன் காணி

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 495 182-32

அரகையுடையான் காணி திருவரங்கப் பெருமான்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 502 189-17

திருநாமத்துக் காணி

: தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 5438 12

காணியாளன்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1496 10

கண்காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1502 19

கங்காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1504 22

காணிக்கை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1505 24

காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1552 85

காணியாளர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1596 137

காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1598 140

காணிக்கை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1598 139

கற்றாயன் காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1601 143

காணிக்கை

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1601 143

வேட்கோவக்காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1610 154

காணிப்பாடல்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1615 160

காணியாளர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1638 190

கற்றாயன் காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1668 215

கோயில்காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1672 221

கற்றாயன் காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1673 224

காணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 1673 224

காணியாளர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2728 82

உதககாணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2736 90

காணியாட்சி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 2736 90

பநந்தாக்கலகாணி

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1691 17

காணியாளர்

: ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 1717 53

கங்காணிப்பர்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 196 197-4

திருவதி ராஜியம்‌

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 216 217-4

வாடா ஒட்டுக் காணிக்கைப்பற்று

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 246 247-6

ஏகாம்பரநாதன்‌ திருநாமத்துக்காணி

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 276 277-2

உத்ஸாஹ காணிக்கை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 282 283-3

காணிக்கை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 282 283-3

காணிக்கை விரிமுட்டு

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 282 283-3

தெண்ணாயக்கர்‌ காணிக்கை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 282 283-2

நாம்‌ கொள்ளும்‌ காணிக்கை

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 282 283-2

உழவு காணி

: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 3 298 299-13
கல்வெட்டில்_ஊர்பெயர்கள் - ஆர் ஆளவந்தான் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (திருவதி காணி 1 results found)