Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Taluk திருச்சிராப்பள்ளி Tiruchirappalli
Village சோழமாதேவி Sholamadevi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King வீரராஜேந்திரன் Virarajendran
Header Detail
Regnal Year No
Historical Year 1063
ARIE No/No
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3710
Book Name Tamilnadu Kalvettukal - 2004: Volume - 1
Author Padmavathy, A; Sridharan, K; Vasanthakalyani, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, மெய்க்கீர்த்தி
Locus : திருக்கயிலாயமுடையார் கோயில் அர்த்த மண்டபம் தெற்குச் சுவர்.
Summary : 2-ம் வரி முதல் அனைத்து வரிகளிலும் சில பகுதிகள் சிதைந்துள்ளன. முதலிரு வரிகள் அம்மன்னனின் வீரத்தைக் கூறுகின்ற வடமொழிப் பகுதியுடனும், அடுத்து 'வீரமே துணையாக' என்று துவங்கும் மெய்க்கீர்த்தியுடனும் காணப்படுகிறது.
இவ்வூரில் ஒரு தத்துவ நூலிற்கு விளக்கமளிக்கும் கல்விப் பணி, சபையோரால் செய்யப்பட்டு வந்தது. அத்தத்துவ நூல் பிரதீபகம் என்ற வார்த்திகம் ஆகும். இந்நூலை எழுதியவர் சிதாளத்த படாரர் என்பவர் ஆவார். இவர் பகவத் பாதியம் என்று கூறப்படுகின்ற சாரீரசு, பாஷ்யத்திற்கு எழுதிய உரைதான் மேற் கூறப்பட்ட பிரதீபகம் ஆகிற வார்த்திகம் ஆகும். இந்த உரை நூலின் பொருளை விளங்கக் கூறி சொற்பொழிவு நிகழ்த்தும் (வக்கணிச்கும்) ஒருவருக்கு கல்விப் பணிக் கொடையாக (விருத்தி) நிலமளிக்கப்பட்ட செய்தியைத்தான் இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
இவ்வாறு இவருக்கு நிலமளிப்பது என்று முடிவெடுத்த அவ்வூர் பெருங்குறி பெருமக்கள் (ஊர் நிர்வாக சபையினர்) அவ்வூர் திருமாதிருஞ்சோலை ஆழ்வார் கோயில் திருமுன்றில் (வளாகத்தில்) கூடிப்பேசி முடிவெடுத்து அதன்படி மேற் கூறியவாறு விளக்கச் சொற்பொழிவு நிகழ்த்தி வரும் கல்வியாளருக்குக் கொடை யளித்தனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate