Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk திருப்பெரும்புதூர் Sriperumbudur
Village சிவபுரம் Sivapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் I Rajadhirajan I
Header Detail
Regnal Year 27
Historical Year 1045
ARIE 234/1961-1962
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3841
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, பள்ளி, மெய்க்கீர்த்தி
Locus : சிவன் கோயிலில் அர்த்த மண்டபக் கிழக்குச் சுவர்.
Summary : முதலாம் இராஜாதிராஜன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசைநாட்டு சிவபுரத்து ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்க் கோயிலில் ஆதித்த வாரம் (ஞாயிறு)தோறும் இறைவனை ஆதித்த வாரப் பெரும்பலி எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டிருந்த பழந்தேவதானம் துப்புரவு பத்து என்ற நிலத்திலிருந்து காணிக்கடனாக ராஜகேசரி என்ற அளவால் நெல்லு முப்பத்துநாற்கலம் பெறப்பட்டு வந்தது. இதற்கு காலளவு பறி கூறியாக ஒவ்வொரு கலநெல்லுக்கும் முன்னாழி உரி நெல் வாசியாக ஏற்றி முப்பத்தைந்து கலநே பதக்கு எழுநாழி நெல் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதிலிருந்து,
(1) கனியமுதுக்கும் திருவமுதுக்கும் ஓராண்டுக்கு முக்கலநே முக்குறுணியும்
(2) திருவாராதனை செய்வார், திருஉண்ணாழிகை உடையார், மாணிகள் அறுவர், பதியார் 24 பேர், பஞ்சாசாரியர், வீணை வாசிப்பான், உடுக்கை வாசிப்பான், திருப்பதியம் பாடுவான், திருவாய்க் கேழ்வி உடையான், பாடவியன் உள்ளிட்ட உவச்சர் பதின்மர், கவரி பிணாக்கள் 12பேர், திருப்பள்ளித் தொங்கலிடுவார் நால்வர், கணக்கன், பண்டாரி, திருமெய்காப்பார் நால்வர், திருப்பள்ளித் தாமம் பறித்துக் தொடுப்பான்- ஆகியோருக்கு ஒருபங்குக்கு பதக்கு நெல் வீதம் 55 பங்குக்கு ஓராண்டுக்கு 29 கலனே தூணிக்குறுணி நாநாழியும்
(3) விளக்குப் பிடிப்பார் நால்வர், கொடிப்பிடிப்பார் நால்வர், ஆகியோருக்கு நெல்லு இருகலன்
ஆகமொத்தம் முப்பத்தைந்து கலன் பதக்கு ஏழுநாழி நெல் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate