Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | விழுப்புரம் | விக்கிரவாண்டி |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | பிரம்மபுரீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | |
Regnal Year | 7 | |
Historical Year | 1290 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீசுவரர் கோயில் திருச்சுற்று மாளிகை தென்புறச் சுவர் | |
Summary | இது பிரமீசுரமுடைய நாயனார் கோயில் தானத்தாற்கு பாண்டிய மன்னன் வழங்கிய ஆணையாகும். பிரமீசுவரமுடைய நாயனார் கோயிலில் விக்கிரம பாண்டியன் தனது பெயரில் குலசேகரன் சந்தி ஒன்றினை நிறுவியுள்ளான். இச்சந்தி வழிபாட்டின் போது அமுதுபடி, சாத்துப்படி போன்ற தேவைகளுக்காக கோலியபுர நல்லூர் பற்றில் ஓகூர் என்னும் ஊரில் 4 வேலி நிலமும் மற்றும் இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிக்கும் மக்களிடம் வசூலிக்கப்படும் செட்டிஇறை, தறியிறை, அழுகல் சரக்கு, அங்காடிப் பாட்டம், செக்குக்கடமை, வாணிகர் பேர்க்கடமை, குளவடை, மாவடை உள்ளிட்ட வரிகளின் மூலம் பெறப்படும் வருவாயினையும் மூலதனமாகக் கொடுத்து அவ்வழிபாட்டை நடத்திட கோயில் தானத்தாருக்கு ஆணையிட்டுள்ளான். |