Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | விழுப்புரம் | விக்கிரவாண்டி |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | பிரம்மபுரீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் & சமஸ்கிருதம் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | காடவர் | |
King | கோப்பெருஞ்சிங்கன் | |
Regnal Year | 27 | |
Historical Year | 1265 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீசுவரர் கோயில் மடைப்பள்ளி வடக்குச் சுவர் | |
Summary | கோப்பெருஞ்சிங்கனின் அரசாணையை கோயில் நிர்வாகிகளுக்கு கச்சிராயன் என்பவன் ஓலையாக அளித்தமை. ஓகூர் பனையூரில் மடப்புறமாக இருந்த 20 மா நிலத்தில் 4 மா நிலம் மடப்புறமாக இருக்கவும், மீதியுள்ள 16 மா நிலத்தின் வரிவருவாயைக் கொண்டு கோப்பெருஞ்சிங்கனின் பிறந்த தினமான ஆவணி மாதம் திருவோணம் திருநாளில் இறைவனுக்குத் தீர்த்தமாடவும், இவன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட அழகிய பல்லவன் சந்தி வழிபாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளத் தொகையை அமுதுபடி படைக்கவும், கோயில் திருப்பணிகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் இருவரிகளில் வடமொழிசுலோகம் உள்ளது. இதனில் திருவோண நாளன்று பார்வதிக்கு விழா எடுப்பதற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சந்தி வீரபிரதாப புவனேக வீரனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறது இக்கல்வெட்டு. |