Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | பூதலூர் |
Village | கோவிலடி | கோவிலடி |
Location | திவ்யஞானேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜகேசரி (கண்டராதித்தன்) | |
Regnal Year | 3 | |
Historical Year | 953 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திவ்யஞானேஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர் | |
Summary | திருப்பேர் என்றழைக்கப்பட்ட இவ்வூரிலமைந்த திருப்புறத்துறையும் சிவனுக்குச் செங்கல்லாக இருந்த கோயிலைத் திருக்கற்றளியாக எடுப்பித்த செம்பியன் வேதிவேளான் இக்கோயிலுக்கு நிவந்தமளிக்க அவ்வூர்ச் சபையாரிடம் நிலம் விலைக்கு வாங்கினான். அந்த நிலத்திலிருந்து வரும் வருமானத்தால் திருவமுதுக்கு அரிசி, கறியமுது, நெய், சற்கரை வட்டு, தயிர், அடைக்காய், வெற்றிலை, சந்தனம், 2 நொந்தா விளக்குகள், 3 சந்தி விளக்குகள் ஆகியவை கொடுக்கப் பட்டதுடன், ஸ்ரீபலிக்குப் பிடிவிளக்கு இரண்டும், அஸ்தமித்த பின் திருக்காப்புச் செய்து முடிக்கிற வரைக்கும் திருமண்டகத்தில் எரிவதற்கு விளக்கு ஒன்றும் நிவந்தம் செய்யப்பட்டது. இப்பொறுப்பை அக்கோயிலில் பணிபுரியும் ஸ்ரீ கோயிலுடையார் ஏற்றுக் கொண்டு நிவந்தஞ் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் யாரேனும் தவறினால் பன்மாஹேஸ்வரரே தண்டம் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. |