Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | பூதலூர் |
Village | கோவிலடி | கோவிலடி |
Location | திவ்யஞானேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 11 | |
Historical Year | 1129 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திவ்யஞானேஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர் | |
Summary | விக்கிரமசோழன் காலத்தில் ஏதோவொரு குழப்பத்தால், (காலம் பொல்லாததாகி) ஊரும் அழிந்து, குடிகளும் ஊரைவிட்டு வெளியேறி ஊரழியும் நிலையேற்பட, திருப்பேர் பெருங்குறி மகாசபையார் பெருமாளிடம் முறையிட, கவிசியன் ஸ்ரீவாசுதேவன் ஸ்ரீதரபட்டரான மதுராந்தக பிரம்மாதிராயர் என்பார் இவ்வூரைக் காத்தார். பின்னர் அவர் நினைத்த காரியம் நிறைவேறியமைக்காகத் தமது காணியான 500 சிந்ந நிலத்தினைத் திருப்படி மாற்றுக்காகக் கொடையாக அளித்தார். முன்னர் அவர் ஊருக்குச் செய்த நன்மையினை கருத்தில் கொண்டு இந்நிலத்தினைக் காசுகொள்ளா இறையிலியாக்கித்தர திருப்பேர் பெருங்குறி மகாசபையார் முடிவுச் செய்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. |