Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | திருவிடைமருதூர் |
Village | மருத்துவக்குடி | மருத்துவக்குடி |
Location | ஐராவதேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்க சோழன் III | |
Regnal Year | 21 | |
Historical Year | 1300 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஐராவதேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தின் தென்புறச் சுவர் | |
Summary | எதிரிலிச் சோழ விசையாலைய பல்லவரையன் என்பவன், ஆனைச்சுழ் திருவிடைக்குளமுடையார்க் கோயில் திருமடைவளாகத்தை விரிவு படுத்தவும், திருநந்தாவனம் அமைக்கவும், காவிரியிலிருந்து திருமஞ்சனநீர் எடுத்துவர வழி அமைக்கவும் ஏற்பாடு செய்த காரணத்தினால், திருமடைவளாகத்தில் குடியிருந்து வந்த ஆனைச்சூழ் பரிக்கிரகத்தாரை வேறு குடியிருப்புக்கு மாற்றினர். அவ்வாறு குடியமர்த்த பல ஊர்களிலிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் இரு பள்ளிகளிடமிருந்தும் நிலங்கள் விலைக்கு வாங்கப்பட்டு அவ்விடத்தில் குடியிருப்பு ஏற்படுத்தி பரிகிரகத்தாரை குடியமர்த்தினர். இவ்வாறு பரிகிரகத்தாரை குடிபெயர்ந்து திருமடைவளாகத்தைப் பெரிதுபடுத்தியபோதும், திருநந்தவனம் புதிதாக ஏற்படுத்தியபோதும், திருமஞ்சனநீர் எடுத்துவர வழி ஏற்படுத்தியபோதும் முன்பிருந்த நிலஅளவையும் அவற்றிலிருந்து காணிக்கடனாகப் பெற்ற நெல்லின் அளவுகளும் மாறும் ஆதலால் அந்த விவரங்கள் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய இரு பள்ளிகள் சேதிகுல மாணிக்கப் பெரும்பள்ளி மற்றும் கங்ககுலசுந்தர பெரும்பள்ளி ஆகியவை யாகும். இப்பள்ளிகளுக்கு பள்ளிச்சந்தமாக இளையான்குடி என்ற ஊர் விளங்கியிருக்கிறது. |