Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | திருவிடைமருதூர் |
Village | மருத்துவக்குடி | மருத்துவக்குடி |
Location | ஐராவதேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்க சோழன் III | |
Regnal Year | 2 | |
Historical Year | 873 |
Book Details
Inscription Details | ||
---|---|---|
Locus | ஐராவதேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தின் வடக்குச் சுவர் | |
Summary | ஆனைச்சூழ் உடையார் திருவிடைக்குளமுடையாருக்கு, பூஜைக்காக திருநட்டப்பெருமாள் என்பவன், தனது காணியான நிலத்தில் திருநாமத்துக் காணியாக நீர்வார்த்துக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. திருவெண்காடுடையார்க் கோயிலுக்கு தினமும் காவேரி ஆற்றிலிருந்து திருமஞ்சன நீர் எடுத்து வருவதற்கும், மேற்பூச்சுக்குத் தேவையான ஏலம் சிதாரி போன்றவற்றிற்கும், திருப்பள்ளித்தாமத்துக்கும், திருவமுதுக்கு வேண்டிய அரிசி, உப்பு, மிளகு, அடைக்காய், வெற்றிலை, ஆகியவற்றிற்கும் சந்தி விளக்குகள் மொத்தம் பத்திற்கு எண்ணை உழக்கும், சனி எண்ணைக் காப்புக்கு சனி ஒன்றுக்கு எண்ணை ஆழாக்கு ஆகியவற்றிற்கும் குசவன், வண்ணான், ஆகியோர் உள்ளிட்ட தேவைகளுக்கும் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு, செம்பியன் நெற்குப்பை என்ற ஊரில் தேவதானமாக ஒருவேலி நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. மருத்துவக்குடி என்ற இவ்வூர்ப் பெயர் கல்வெட்டுகளில் ஆனைச்சூழ் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. |