Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | புள்ளமங்கை | புள்ளமங்கை |
Location | பிரம்மபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | விக்கிரமசோழன் | |
Regnal Year | 9 | |
Historical Year | 1127 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர் | |
Summary | நித்தவிநோத வளநாட்டு கிழார்க்கூற்றத்துப் பிரமதேயம் புள்ளமங்கலத்துத் திருவாலந் துறை மகாதேவர் கோயிலில் பள்ளி பொன்னி நாடாழ்வானும், வாணராய போயனும் காவற்பணி செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டு, அம்பு எய்து சண்டையிட்டபோது, வாணராயப் போயன் அம்பு பட்டுப் பொன்னிநாடாழ்வான் மகன் குப்பைப் பெருமான் இறந்து விட்டான், அவன் அதற்கு இழப்பீடாக எதுவும் கொடுக்காத காரணத்தினால் குப்பைப்பெருமான் பெயரில் கோயிலில் 72 ஆடுகள் கொடுத்து 3/4 திருகொந்தா விளக்கு எரிக்கவேண்டும் என வாணராய போயனுக்குச் சபையார் ஆணையிட, அவன் 72 ஆடுகள் கொடுத்த செய்தியும், சிவப்பிராமணா மூவர் அதனை ஏற்று திகாக்தாவிளக்கை எரிக்க உடன்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது. |