Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | பாபநாசம் | பாபநாசம் |
Village | புள்ளமங்கை | புள்ளமங்கை |
Location | பிரம்மபுரீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராசராசன் I | |
Regnal Year | 21 | |
Historical Year | 1006 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீஸ்வரர் கோயில் கருவறை மேற்குச் சுவர் | |
Summary | முதலாம் இராஜராஜ சோழனின் 120 ஆட்சியாண்டில் சபையோரால நினறோதும் சட்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் பற்றி [பார்க்க ௧, எண். 10] இக்கல்வெட்டும் பேசுகிறது. முன்னர் நீலமங்கலத்து முட்டத்து அளையூர் நக்கன் காளி என்பவன காணியாய் அனுபவித்த நிலத்தைச் சபையோர் விலை கொண்டு, மன்னரின 12-வது ஆட்சியாண்டின் போது நின்றோதும் சட்டர்களுக்கு இறையிலியாக வழங்கிக் கல்லில் பொறித்தும் வைத்தனர். ஆனால் தற்போது நின்றோதும் சட்டர்கள் ஓதுவாரினறிப் போய்விட்டமையால் இறையிலியாக அறிவிக்கப்பட்டிருந்த அந்நிலங்களுக்கு இறை [வரி] ஏற்றிக் கொள்க என்று மன்னர் ஆணையிட்டபடியால், அந்த ஒன்றே நான்கு நிலத்திற்கும் இறை கொள்வதாக நித்தவினோத வளநாட்டு கிழார் கூற்றத்துப் பிரம்மதேயம் புள்ளமங்கலத்துச் சபையோர் கூடி முடிவெடுத்தனர். அப்போது தண்டல் அதவத்தூர் உடையாரும் [அரசு அதிகாரி] அக்கூட்டத்தில் பங்கு பெற்றிருந்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. |