கல்வெட்டுச் சொல்லகராதி | Epigraphical Glossary - Tamil Nadu Archaeology Department (வரிப்பொத்தக நாயகம் 11 results found)

அமரநாயகம்

: அமரப்பதவி

ஓலை நாயகம்

: அரசன் இடும் உத்தரவுகளை உரியவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் அரசாங்கத்துறையின் தலைமை அதிகாரி

கண்காணி நாயகம்

: மேற்பார்வை யிடுவோர் தலைமை உத்தியோகம்

தண்டநாயகம்

: படைத் தலைமையாகிய உத்தியோகம்; அந்தப் பதவி வகிப்பவன் தண்டநாயகன்

திருமந்திரவோலை நாயகம்

: அரசாங்கத்தின் ஒலை யெழுதும் துறையின் தலைமை அதிகாரி

படைநாயகம்

: சேனைத் தலைமை

படைநாயகம்

: சேனைத் தலைமை

மாளிகை நாயகம்

: அரண்மனை விசாரணை உத்தியோகத் தலைமை

வரிப்பொத்தக நாயகம்

: அரசாங்க வரிக்கணக்கை நிர்வகிக்கும் துறை; அதன் தலைமை அதிகாரி

வரிப்பொத்தகம்

: அரசிறைக் கணக்கு; அதை எழுதும் அதிகாரி

வேலிநாயகம்

: கிராமத்திலே பயிரிடும் நிலங்களைக் கண்காணிக்கும் அதிகாரி
கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி | Inscription Glossary - MK University (வரிப்பொத்தக நாயகம் 9 results found)

கண்காணி நாயகம்

:
  • கிராம அல்லது ஊர் நிர்வாகங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன்.

ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம்

:
  • கோயிற் காரியங்களை ஒழுங் காக நடத்துவிக்கும் அதிகாரி ஸ்ரீகார்யம்; ஸ்ரீகார்யம் தவறாமல் நிகழ்வதை ஆராய்பவன் ஸ்ரீகார்யக் கண்காணி; இவர்கள் இருவர் செயலும் குறையின்றி முறையாக நிகழ ஆராய்ந்து தணிக்கை செய்யும் சலைமை அதிகாரி நாயகம். எனவே கோயிற் காரியங்களின் நிர்வாகத் தலைமைத்துறை அதிகாரி ஸ்ரீகார்யக் கண்காணி நாயகம் என்று பெயர் பெற்றார்.
    முதல் இராசராசன் காலத்தில், தஞ்சைப்பெரிய கோயிலுக்கு இருந்த ஸ்ரீகார்யக்கண்காணி நாயகம்.

  • பாண்டி நாடான ராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர் கூற்றத்துப் பாளூர்ப்பாளூர் கிழவன் அரவணையான் மாலரி கேசவன், என்பவனாவன்

  • தெ. கல். தொ. 2 : 2. கல். 36

தண்டல் நாயகம்

:
  • அரசுக்குரிய இறைவரி முதலிய வருவாய்களை உரிய முறைகளில் நாட்டில் வசூல் செய்யும் குழுவினர்க்குத் தலைமையதிகாரி. இவர்கட்கென்று பாதுகாப்புப்படையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.

  • இலைப்புணைப்பட்ட கரைப்படையிலார்கட்கு தண்டல்நாயகம்

  • முதற்குலோத்துங்கன், கி. பி. 1079

  • தெ. கல். தொ. 5. கல். 990

திருமந்திர ஓலை நாயகம்

:
  • அரசன் ஆணையைத் திருமந்திர ஓலை என்னும் அதிகாரி கேட்டபடி எழுதிய பின்னர் அவ் வோலையை அரசனிட்ட ஆணையோடு ஒப்பிட்டுப் பார்த்து அனுமதி வளங்கும் தணிக்கை அதிகாரிகள்.

நாட்டு நாயகம்

:
  • அரசியல்வழி நாட்டு நிர்வாகத் தலைமையை ஏற்றுள்ளவன். நாடுகாவல் - மேலதிகாரி. இவர்கள் நாடு கண் காணி என்னும் அதிகாரிகளுக்கு மேம்பட்ட அதிகாரமுடையவராவர்.

நாடுகண்காணி நாயகம்

:
  • சோழராட்சியில். அரசு அமைத்த நாட்டு அதிகாரிகளின் செயல்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன். இவ்வதிகாரி எவ்விடத்தும், யாரிடமும், எக் கணக்கினையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி பெற்றவன்.

  • இந்நாடு உள்ளிட்ட நாடுகள் கண்காணி நாயகம் செய்கின்ற வைப்பூர் உடையான்

  • முதல் இராசராசன்

  • தெ. கல். தொ. 18. கல். 328

  • திருக்கோவலூர் திருவீரட்டானமுடைய மஹாதேவர் ஸ்ரீ பண்டாரம், இன்னாடு கண் காணி நாயகஞ் செய்யும் இளமங்கல முடையான நிச்சல் ஸ்ரீயாரூர் இத்சேவர் ஸ்ரீ பண்டாரஞ் சோதிச்சு ஸ்ரீபண்டாரப் பொத்தகப்படி நிலைவுருக் கண்டு.

  • முதல் இராசேந்திரன், கி. பி. 1018

  • தெ. கல். தொ. 7. கல். 891

  • சேநாபதி முடிகொண்ட சோ விழுப்பரையர்க்காக நாடு கண்காணி நாயகஞ் செய்கின்ற கந்சி சீ காருடையான்

  • (புதுக். கல். 90)

புரவுவரித்திணைக்கள நாயகம்

:
  • அரசிறை நீங்கிய ஊர்களினின்றும் வருவதற்குரிய பிறவரிகளுக்குக் கணக்கு வைத்திருப் பவர்கட்குத் தலைவர்.

முகவெட்டி நாயகம்

:
  • புரவுவரித்திணைக் களத்தில் அடங்கிய முகவெட்டி என்னும் வரிதிட்ட அதிகாரிகள் எழுதிய ஆணை ஓலைகளை ஆய்வு செய்து அனுமதிக்கும் தலைமை அதிகாரி.

வரிப்பொத்தகம்

:
  • அரசுக்குரிய இறை, வரி ஆகியவற்றிற்குரிய கணக்குப் புத்தகம். இப்புத்தகத்தில் வரவு, தரவு விபரங்களை எழுதும் அதிகாரி, வரிப் பொத்தகக் கணக்கு என்று பெயர் பெறுவர்.

  • வரிப்பொத்தகம் சாத்தனூருடையான் குமரனரங்கனும், பருத்தியூர்க்கிழவன் சிங்கன் வெண்காடனும் இருந்து - வரியிலிட்டுக் குடுத்த ஆனைமங்கலம்

  • பெரிய லெய்டன் செப்பேடுகள்

  • இவ்வூர் ஆயமும் அந்தராயத்தால் காசுநெல் உள்பட தேவ தானமாகக் குடுத்தோமென்று வரியிலார்க்கும் வரிப்பொத்தகஞ் செய்வார்கட்கும் சொன்னோம்

  • தெ. கல். தொ. 7. கல். 538

Tamil Nadu Archaeology Department Publication Books Glossary (வரிப்பொத்தக நாயகம் 27 results found)
Word Book Name TNARCH Data Page

திணைக்கள நாயகம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2375 54

திருமந்திர ஓலை நாயகம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2401 70

திணைக்கள நாயகம்

: அழகர் கோயில் கல்வெட்டுகள் 2489 159

நாயகம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2172 84

தண்டநாயகம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2192 105

நாயகம்

: கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் 2281 211

புரவுவரி திணைக்களநாயகம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3156 68

தெய்வநாயகம்‌ பிள்ளை

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3159 72

வீரநாயகம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3176 90

தண்டல் நாயகம்‌

: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 2 3268 199

தண்டநாயகம்‌

: நாகப்பட்டின மாவட்டக் கல்வெட்டுகள் 1184 205

கெ நாயகம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 2 904 354-1

புரவரி ஸ்ரீகரண நாயகம் குழலூருடையான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 606 57-45

புரவரி ஸ்ரீகரண நாயகம் பாலையூர் கிழவன்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 606 57-45

ஸ்ரீ கரண நாயகம் மேலூருடையான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 606 57-92

புரவரி ஸ்ரீகரண நாயகம் குழலூருடையான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 608 59-20

ஸ்ரீ கரண நாயகம் பெருநல்லூருடையான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 608 59-13

ஸ்ரீ கரண நாயகம் பாலையூர் கிழவன்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 608 59-19

புரவுவரி ஸ்ரீ கரண நாயகம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 628 79-214

புரவுவரி ஸ்ரீ கரண நாயகம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 628 79-215

ஸ்ரீ கரணத்து நாயகம் எழிலூருடையான்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 659 109-10

ஸ்ரீ கரண நாயகம் குன்றங்கிழாந்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 659 109-10

புரவுவரி ஸ்ரீகரண நாயகம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 674 124-15,16,1

ஸ்ரீ கரண நாயகம் மொன்றுழாந்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 674 124-16,17

புரவுவரி ஸ்ரீகரண நாயகம்

: நன்னிலம் கல்வெட்டுக்கள்: தொகுதி - 1 675 125-9,10,11

நாயகம்‌

: கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்: தொகுதி - 1 2033 313

சிகரண நாயகம்

: திருத்துறைப்பூண்டி கல்வெட்டுகள் 429 121-II,3